Melting Soul: 2018

Friday, 2 March 2018

Vannam Mella Kizhll Irangi

.

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ...
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

Kannodu Kaanbhathellam




ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
(கண்ணோடு)

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

(கண்ணோடு)

(சுவரங்கள்)

Mandram Vandha Thendraluku



மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே.. என் கண்ணே

பூபாளமே.. கூடாதெனும்
வானம் உண்டோ சொல்…

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்……

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே

மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன.. வா…

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே.. என் கண்ணே

பூபாளமே.. கூடாதெனும்
வானம் உண்டோ சொல்…

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே

Poove Sempoove Un Vaasam



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே )
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே )
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்
(பூவே )

Pottu Vaitha Oru Vatta Nila



பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காலை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா